டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு திட்டம்


டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு திட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2024 12:22 PM IST (Updated: 2 Dec 2024 1:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

சென்னை,

மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்க பணி மேற்கொள்வதற்கான குத்தகை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணியால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளே டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


Next Story