சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
குற்ற சம்பவங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்? .
தொடர் கொலைகளால் இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.குற்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story