ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்


ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 25 Dec 2024 1:48 AM IST (Updated: 25 Dec 2024 12:48 PM IST)
t-max-icont-min-icon

ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் உள்ளிட்டோரை அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் பெண் வக்கீலை அவதூறாக பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை அவசர வழக்காக நேற்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், 2 வழக்குகளிலும் மனுதாரரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்குகளுக்கு ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டு மதுரை கிளையை அணுகும்படி மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜராக வக்கீல் டி.எஸ்.விஜயராகவன், ''வைணவ மரபுபடி குளித்துவிட்டு பூஜை செய்து நெற்றியில் நாமம் போடவேண்டும். அதற்கு அனுமதியில்லாததால், சிறையில் மனுதாரர் குளிக்காமலும், சாப்பிடாமலும், பூஜை செய்யாமலும் உள்ளார். இதற்கும், வீட்டு சாப்பாடு வழங்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதுகுறித்து சிறை நிர்வாகத்தை அணுகும்படி மனுதாரர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story