பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 18ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயிலானது. ரெயில் எண் 06061 சென்னை எழும்பூர் மதுரை முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 18, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கத்தில் ரெயில் எண் 06062 மதுரை - சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்
இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.