பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு


பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
x

கோப்புப்படம்

வரும் 19-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான நாட்களில் நேற்றைய ஒரு நாள் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களும் அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜன.19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு (06168) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரெயில் எண் 06061 சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 18, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் ரெயில் எண் 06062 மதுரை - சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.






Next Story