தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

சிறப்பு மருத்துவ முகாம்கள் ஜனவரி மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் .

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.இதுவரை சுமார் 62,000-க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இசிஜி, எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது . இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப ஜனவரி மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. .

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு எவ்வளவு நபர்கள் வருவார்கள் என்பது குறித்து அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்க உள்ளோம். கடந்த ஆண்டைவிட இந்த முறை கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க உள்ளோம். என தெரிவித்தார் .


Next Story