தென் மாவட்ட பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்: போக்குவரத்து கழகம்

தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் இனி தாம்பரம் வரை இயக்கப்படாது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது " என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






