சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு


சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
x

டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகை எதிரொலியாக, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால், பனியுடன், புகையும் கலந்து புகைமூட்டமாக உள்ளது. கடும் புகை மூட்டம் காணப்படுவதால், சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் போகிப் பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, போகி பண்டிகை, பனிமூட்டம், விமானங்கள், ரத்துடெல்லி, பெங்களூரில் இருந்து, இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்து காணப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story