கோவையில் 'ஸ்மார்ட் கேமரா' திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்


கோவையில் ஸ்மார்ட் கேமரா திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
x

கோவையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஸ்மார்ட் கேமரா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் கேமரா' மற்றும் 'ஸ்பீக்கர்' திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 200 பேருந்து நிறுத்தங்களில் இந்த 'ஸ்மார்ட் கேமரா' மற்றும் 'ஸ்பீக்கர்' பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story