சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மதுரை,
பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு தலைவராக இருப்பவர், எம்.எஸ்.ஷா. இவர் கல்லூரியும் நடத்தி வருகிறார். 15 வயது பள்ளிக்கூட மாணவி ஒருவரின் தந்தை, கடந்த ஆண்டு மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனது மகளின் செல்போனில் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து வந்த ஆபாசமான உரையாடல் இருந்தது. ஆசை வார்த்தைகூறி அவளை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு எனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில், பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story