கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 24 May 2025 1:34 PM IST (Updated: 24 May 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story