ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார் செந்தில் பாலாஜி - எடப்பாடி பழனிசாமி தாக்கு

அதிமுக ஆட்சி அமைந்தது, ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாட்கள் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் 2-வது நாளாக கரூரில் எடப்–பாடி பழ–னி–சாமி பிர–சார வாக–னத்–தில் பேசி–ய–தா–வது:-
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். 1.5 லட்சம் ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவால் தேர்வு எழுதும் மன உளைச்சலில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடிவிட்டார்கள். இவர்களெல்லாம் கல்வியிலே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நிகழ்ச்சி நடத்துறாங்க.
அதிமுக தந்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு கொடுக்கிறது. தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளதால் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்கின்றனர். ரூ.12,400 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு.
சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார். புதுபுது யுக்தியை கையாள்வர். அத்தனையும் கிரிமினல் எண்ணம். தேர்தல் நடந்தபோது, வெள்ளிக் கொலுசு கொடுக்கிறேன் எனக்கூறிவிட்டு போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர் செந்தில்பாலாஜி.
உரிமைக்காக போராடும் மக்களை தடுக்கக் கூடாது. தமிழகத்தில் 96 கலை கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






