'2026ன் துணை முதல்வரே' - செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் நிர்வாகி சார்பில் சென்னையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
செல்வப்பெருந்தகையின் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டரில் '2026ன் துணை முதல்வரே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகமும் இடம்பெற்றுள்லது. தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் ஷெரிப் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார்.
செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் நிர்வாகி ஷெரிப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அநாகரிகமான செயல் கட்சியின் கட்டுப்பாடு, கண்ணியத்தை மீறியுள்ளது. இது தொடர்பாக ஷெரிப் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க ஷெரிப்பிற்கு செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.






