திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக கடல் அரிப்பு


திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக கடல் அரிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2025 3:31 AM IST (Updated: 3 Jan 2025 4:08 AM IST)
t-max-icont-min-icon

ராட்சத அலைகளால் 7 அடி ஆழத்திற்கு திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் கடல் பகுதியில் பவுர்ணமி, அமாவாசை நாட்கள் மற்றும் அவற்றுக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கம். பின்னர் கடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

கடந்த மாதம் 30-ந்தேதி அமாவாசை தினம் என்பதால், கடந்த 2 நாட்களாக திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்து கடற்கரைக்கு இறங்கும் படிக்கட்டு அருகில் சுமார் 300 அடி தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. நேற்று கடல் அரிப்பு மேலும் அதிகரித்ததால், கடற்கரையில் 7 அடி ஆழத்துக்கு பள்ளமாக காணப்பட்டது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுமார் 25 அடி தூரம் வரையிலும் ராட்சத அலைகள் வெளியே வந்து சென்றன.

எனினும் பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் இறங்கி புனித நீராடினர். கடல் அரிப்பு ஏற்பட்டு பள்ளமான இடத்தில் ஏறி இறங்குவதற்கு சற்று சிரமப்பட்டனர்.திருச்செந்தூர் கோவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story