உருவ கேலியால் சோகம்.. +2 மாணவர் தற்கொலை


உருவ கேலியால் சோகம்.. +2 மாணவர் தற்கொலை
x

குண்டாக, கருப்பாக இருக்கிறாய் என கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா பள்ளியில் +2 பயின்று வருபவர் கோபிநாத்தின் மகன் மாணவர் கிஷோர் (17). மாணவனின் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவர்கள் கிஷோரை உருவ கேலி செய்துள்ளனர்.

இதனால் மிகுந்த கவலையடைந்த சிறுவன் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக விரக்தியடைந்த மாணவர் ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

குண்டாக, கருப்பாக இருக்கிறாய் என சக மாணவர்கள் கேலி செய்ததால் கிஷோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story