புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு


புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
x

புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:-

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, பழுதடைந்த நிலையில் உள்ள 6,424 குடியிருப்புகள் 1148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து. அடுத்த இரு ஆண்டுகளில். 5,256 குடியிருப்புகள் 1051 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும். குறைந்த வருமானம் கொண்ட வகையினருக்கான வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்திடவும்.

தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திடவும் உதவிடும் வகையில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 7,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றைத் தொடர்ந்து, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம். தலைநகர் புதுடெல்லியில் வைகை தமிழ்நாடு இல்லம், கோவை மற்றும் திருச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகங்கள் என தமிழ்நாட்டின் நவீன அடையாளங்கள் பலவற்றை அழகுற வடிவமைத்துக் கட்டமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

புராதனக் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டடம், இராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம்,

திருச்சியில் இராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம். எட்டையபுரம் நகரில் 131 உள்ள மகாகவி பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டடங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப் பணித்துறைக்கு 2,457 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story