உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு


உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு
x

கோப்புப்படம்

உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை,

உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் சில கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அரசு பஸ், ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story