சென்னை: 'வேகமாக செல்லாதீர்கள்' என்று சொன்ன பயணியை ஹெல்மெட்டால் தாக்கிய ரேபிடோ டிரைவர்


சென்னை: வேகமாக செல்லாதீர்கள் என்று சொன்ன பயணியை ஹெல்மெட்டால் தாக்கிய ரேபிடோ டிரைவர்
x

பைக்கை தாறுமாறாக ஓட்டியதை தட்டிக்கேட்ட பயணியை ரேபிடோ டிரைவர் ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

சென்னையில் பைக்கை தாறுமாறாக ஓட்டியதை தட்டிக்கேட்ட பயணியை ரேபிடோ டிரைவர் ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், நேற்று முன்தினம் திருவல்லிக்கேணியில் இருந்து, நுங்கம்பாக்கம் செல்ல ரேபிடோ செயலியில் பதிவு செய்துள்ளார். அவரை அழைத்துச் செல்ல ராயபுரத்தைச் சேர்ந்த ரேபிடோ டிரைவர் கிதியோன் என்பவர் வந்துள்ளார்.

அவருடன் ராஜசேகர் சென்ற நிலையில், கிதியோன் பைக்கை தாறுமாறாக ஓட்டி உள்ளார். அவரிடம் ராஜசேகர் வேகமாக செல்லாதீர்கள், பைக்கை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாசாலை, தபால் நிலையம் அருகே சென்ற போது, அங்கு நடந்து சென்ற கர்ப்பிணி மீது மோதுவது போல கிதியோன் சென்றுள்ளார்.

உடனடியாக அவரிடம் பைக்கை நிறுத்தச்சொல்லிய ராஜசேகர் தன் பயணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிதியோன், அவரை ஹெல்மெட்டால் தாக்கி உள்ளார். இதைப் பார்த்த போக்குவரத்து போலீசார் கிதியோனை பிடித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story