முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு
x
தினத்தந்தி 8 Aug 2025 3:21 PM IST (Updated: 8 Aug 2025 4:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நடைபெற்றது

சென்னை

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் இன்று சந்தித்தார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசும் , ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான சேதுசீமையின் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.

இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ரவிச்சந்திர ராமவன்னி ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story