'நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விடமாட்டான்' - நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025' என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story