தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது - சுற்றறிக்கை விடுத்த கோவில் நிர்வாகம்


தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது - சுற்றறிக்கை விடுத்த கோவில் நிர்வாகம்
x

அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று கோவில் செயல் அலுவலர் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது. அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோவில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும், தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலரின் இந்த சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story