பூம்புகார் சிற்றுண்டி நிலையம் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி


பூம்புகார் சிற்றுண்டி நிலையம் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி
x

கோப்புப்படம்

சிற்றுண்டி நிலையம் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் 5 மணி நேரம் பசியுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி நிலையம் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை பார்ப்பதற்காக தினமும் சுமார் 5 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி நிலையம் ஒப்பந்த காலம் முடிந்ததால் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 5 மணி நேரத்துக்கும் மேலாக பசியுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிற்றுண்டி நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன் கூறும்போது, "ஏப்ரல் முதல் வாரத்தில் சிற்றுண்டி நிலையம் திறக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.


Next Story