பொங்கல் விடுமுறை: கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை


பொங்கல் விடுமுறை: கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
x

கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பொங்கல் விடுமுறை நாட்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற உள்ள பருவத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பருவத் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு அழுத்தத்தை தரக்கூடும் எனவும், எனவே தமிழ் கலாசார பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தேர்வுகளை ஒத்திவைத்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story