பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்


பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
x
தினத்தந்தி 14 Jan 2025 4:10 AM IST (Updated: 14 Jan 2025 5:20 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. பொங்கலுக்காக 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டன.கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர்.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களும் இயக்கப்பட்டன.கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story