சென்னையில் 'ரூட் தல' மோதலை தடுக்க 257 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை புறநகர் ரெயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களிடையே 'ரூட் தல' விவகாரம் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. தற்போது கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே மோதல் போக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதான ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி 'ரூட் தல' மோதலை தடுக்க சென்னையில் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 257 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் கீழ்பாக்கம், மெரினா கடற்கரை, நந்தனம், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






