எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது - ஜெயக்குமார் பேட்டி

எம்.ஜி.ஆர். சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னை மெரினாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். எல்லோரும் போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.மதத்தால் பிரிவினை செய்கிறது பாஜக. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது.
பாஜகவைபோல் எம்.ஜி.ஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை. சாதி,மதம், இனத்தை கடந்து சமத்துவம் பார்க்கும் இயக்கம் அதிமுக. எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்றார்.
மோடியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story