கோவில்பட்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி


கோவில்பட்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி
x

ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் பயணி காயமடைந்தார்.

கோவில்பட்டி,

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் விரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்த ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை அடுத்த இலுப்பையூரணி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள பகுதியில் யாரேனும் விழுந்து கிடக்கிறார்களா? என தேடினர். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரெயில்வே போலீசார் காயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷானு (வயது 35) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story