பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை


பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
x

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி திறந்து வைக்கிறார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி திறந்து வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாம்பன் பாலத்திற்கு, ராமேசுவரத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்து, வளர்ந்து, அந்த மாவட்டத்திற்கே ஒரு அடையாளமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாமின் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story