மீனாட்சி அம்மன் கோவில் தங்க கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் பூஜை


மீனாட்சி அம்மன் கோவில் தங்க கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் பூஜை
x

கோப்புப்படம்

முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது.

மதுரை,

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. எனவே கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கோபுரங்களில் சாரம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பின்னர் கோவிலில் பல்வேறு பகுதிகளில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலயம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தங்க விமானங்கள், விமானங்கள் மற்ற கோபுரங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெறவுள்ளது. அதற்கான முதல் கால யாகசாலை பூஜைகள் நேற்று மாலை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் காலையிலும் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் மாலையிலும் இன்று நடக்கிறது.

நாளை காலை 4-ம் கால பூஜைகள் காலை 9.30 மணி விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை, யாத்ரா தானத்துடன் யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகும். பின்னர் மதியம் 12.15 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் நடைபெறும். அதைதொடர்ந்து மகாதீபாராதனை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.


Next Story