'சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிப்பு' - தமிழக அரசு தகவல்

சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சிறை காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும், ஆர்டர்லி முறை குறித்து எதிர்காலத்தில் புகார் வந்தால் அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல் காவல்துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story