ஓ பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜெயலலிதா கூறினார்: ஆர்.பி. உதயகுமார்


ஓ பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக  ஜெயலலிதா கூறினார்: ஆர்.பி. உதயகுமார்
x

அதிமுக ஒற்றுமையாக இருப்பதற்கு யாரும் தடையாக இல்லை என்பதை தொண்டர்கள் அறிவர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், யாரிடமும் நான் என்னை அழைத்துக் கொண்டு போய் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்க்க வேண்டும் என்று சொன்னதே கிடையாது எனவும், ஆர்.பிஉதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது என ஆர்.பிஉதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் இது தொடர்பாக கூறியதாவது: ஜெயலலிதா நற்சான்று கொடுத்தார் என்று ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஓ பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக என்னிடமே ஜெயலலிதா கூறினார்.

கட்சி ஒற்றுமைக்கு யாருமே தடையாக இல்லை என்பதை தொண்டர்கள் அறிவர். ஒற்றுமைக்காக யாரோ தடையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். ஓபிஎஸ் தனக்கு அதிகாரம் வேண்டும் என செயல்பட்டதுதான் பிரச்சினையின் ஆரம்பம். என்னை எச்சரிக்கை அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அதிகாரம் வேண்டும் என்றால் அமைதியாக இருப்பார். அதிகாரம் இல்லையென்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story