ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி யாத்திரை: ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு


ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி யாத்திரை: ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைப்பு
x

கோப்புப்படம்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், பா.ஜனதா சார்பில் தேசிய கொடி யாத்திரை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பா.ஜனதா சார்பில் சுதந்திர தினத்தை பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை, பொது மக்கள் தேசிய கொடியை ஏந்தி கொண்டாடினர். எனவே, வரும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, வரும் 10-ந்தேி முதல் தேசிய கொடி யாத்திரை, வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுதல், தூய்மை பணிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் தேசிய கொடி யாத்திரை மற்றும் பிற பணிகளை ஒருங்கிணைக்கவும், வழிநடத்திடவும், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் கவிதா ஹகாந்த், உள்பட 7 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story