ஒருதலை காதல்: இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் விஜய் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை ஒரு தலையாக காதலித்து வருகிறார்.
இந்தநிலையில் அந்த இளம்பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் விஜய்யின் தொல்லை அதிகமானதால் அந்த இளம்பெண், தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.
Related Tags :
Next Story