ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை - அண்ணாமலை


ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை - அண்ணாமலை
x

ஒரே நாடு,ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சிலர் திரித்து கருத்து சொல்கின்றனர்; அரசியல் தலைவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மசோதாவால் யாருக்கும் பிரச்சினை இல்லை. மிகப்பெரிய அளவில் பொருளாதார பலன்கள் கிடைக்கும்

2029க்கு பின் நாடாளுமன்ற கால அளவை கொண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் நான்கு தேர்தல்கள் ஒரே நாடு ஒரே தேர்தல்தான். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கலைப்பினால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து காலமும் சூழலும் முடிவு செய்யும், கூட்டணி இல்லை என்று மறுக்கவில்லை. பாஜகவிடம் வலிமையான கூட்டணி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story