ஓமலூர் வெடி விபத்தில்.... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! - ராமதாஸ்

ஓமலூர் கோவில் திருவிழா வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவிற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிகள் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 32 வயதுக்கும் குறைவான உழைக்கும் இளைஞர்கள். அவர்களில் இருவர் குடும்பத்தின் வாழ்வாதாரமாக திகழ்ந்தவர்கள். அதனைக் கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






