சென்னை பாரிமுனையில் பழமையான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தது: 3 பேர் காயம்


சென்னை பாரிமுனையில் பழமையான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தது: 3 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Nov 2024 6:29 AM (Updated: 11 Nov 2024 6:32 AM)
t-max-icont-min-icon

சென்னை பாரிமுனையில் பழமையான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சென்னை,

சென்னை பாரிமுனையில் பயன்பாட்டில் இல்லாத பல் மருத்துவமனையின் ஆண்களுக்கான விடுதி கட்டிடமாக செயல்பட்டு வந்த, 60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலை ஓரம் நடந்து சென்றவர் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 30-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.


Next Story