ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் உயிரிழப்பு
டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை நிறுத்தியதால் அதில் பயணம் செய்த பயணிகள் உயிர்தப்பினர்.
சென்னை,
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், மாநகர போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர பஸ்சை (தடம் எண் 578) ஒட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்தநிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொண்டிருந்த போது டிரைவர் ஸ்ரீதருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவரை சோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பஸ் பயணிகள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story