பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி,

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

"எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்." என தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story