திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது


திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2025 7:47 AM IST (Updated: 19 Feb 2025 8:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு ரெயிலில் கணவன், மனைவி வந்துள்ளனர். இவர்கள் இரவில் எங்கு செல்வது என தெரியாமல் நின்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம்(வயது 24), முகமது டேனிஸ்(25) மற்றும் முகமது முர்சித்(19) ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கத்தியைக் காட்டி கணவரை மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வடமாநில பெண் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் முகமது முர்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். . பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் இருந்து வேலை தேடி திருப்பூர் வந்த பெண்ணுக்கு பீகாரைச் சேர்ந்த 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story