பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு - வடமாநில வாலிபர் கைது


பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு - வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 July 2025 1:50 PM IST (Updated: 20 July 2025 2:52 PM IST)
t-max-icont-min-icon

சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி உள்ளே சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம்போல விடுதியில் தூங்கிய பெண்கள், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தங்களது செல்போன்கள் காணாததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகம் சார்பில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி உள்ளே சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் பிரபு (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் விடுதிக்குள் புகுந்து செல்போன்களை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராம்சங்கர் பிரபுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story