சென்னையில் மின்தடை இல்லை; தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்..உதயநிதி ஸ்டாலின் பேட்டி


சென்னையில் மின்தடை இல்லை;  தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்..உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2024 6:53 AM GMT (Updated: 15 Oct 2024 6:54 AM GMT)

சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது. பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும்

சென்னை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படவில்லை. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து உள்ளது. சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை. சென்னையில் 80, மற்ற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 631 உட்பட மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.*சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர். என்று கூறினார்.


Next Story