நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையை விட்டு வெளியே சென்றார் சபாநாயகர் அப்பாவு


நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையை விட்டு வெளியே சென்றார் சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 17 March 2025 11:13 AM IST (Updated: 17 March 2025 11:13 AM IST)
t-max-icont-min-icon

துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார்.

சென்னை,

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இன்று முதல் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு சட்டசபையை விட்டு வெளியே சென்றுள்ளார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார். அதிமுக கொண்டு வந்த தீர்மானம் வெற்றி அடைய 118 வாக்குகள் தேவை. அதிமுகவின் தீர்மானத்திற்க்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story