'புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை' - அமைச்சர் சேகர்பாபு


புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை - அமைச்சர் சேகர்பாபு
x

புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது. தெய்வ திருவுருவங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலண்டரை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார். பல கோவில்களில் தொகையை பெற்றுக்கொண்டு சிலரை அர்ச்சகர்கள் உள்ளே அழைத்து செல்வதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முடிந்த அளவிற்கு அவர்களை கட்டுப்படுத்தி வருவதாக சேகர்பாபு தெரிவித்தார்.


Next Story