நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் பலி


நீலகிரி: காட்டு யானை தாக்கி பெண் பலி
x

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா தேனாடு கீழ்கோத்தகிரி அருகே உள்ள கீழ் கட்டபெட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 56). இவர் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தெங்குமரஹாடா கல்லம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீராசாமி என்பவரது வீட்டிற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.

இதையடுத்து தெங்குமரஹாடாவில் பஸ்சில் இருந்து இறங்கிய அவர், அங்குள்ள கூட்டுறவு விவசாய பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை, லட்சுமியை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story