நீலகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு உத்தரவு

பிரமோக்குட்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நீலகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்டம் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21.06.2020 முதல் உதகை கையாசம் பிள்ளை வீதியை சேர்ந்த 18 வயது சிறுமி தன்னை, தாமஸ் சர்ச் சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய நீலகிரி போலீசார், பிரமோக்குட்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து உதகை மகிளா நீதிமன்றத்தில் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நித்தியா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டணையும் 10,000/- ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செந்திக்குமார் தீர்ப்பளித்தார்.






