தென்னிந்தியாவை இணைக்கும் புதிய வந்தேபாரத் ரெயில் - நயினார் நாகேந்திரன் வரவேற்பு

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின் வழியே ரெயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் வகையில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின் வழியே இயக்கப்படும் இந்தப் புதிய வந்தே பாரத் இரயில் மூலம், தமிழகத்தின் உட்கட்டமைப்பு வலுப்படுவதோடு கொங்கு மண்டலத்தின் போக்குவரத்துத் துறையும் மேம்படும் என்பது கூடுதல் சிறப்பு.
நமது தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டும், தென்னிந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையிலும் இப்படியோர் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள நமது பாரதப் பிரதமர் மோடிக்கும், நமது மரியாதைக்குரிய மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஸ்னவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






