‘நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்


‘நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
x

தன்னிடம் ஆதாரம் இல்லாவிட்டாலும், நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதை நம்பவில்லை என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை. என்னிடம் ஆதாரம் இல்லாவிட்டாலும், நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதை நான் நம்பவில்லை. ஏனெனில், நேதாஜியின் தீவிர ஆதரவாளரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ‘நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, நான் அவரை சந்தித்தேன்’ என்று கூறியுள்ளார்.

நான் பசும்பொன் அவர்களின் வார்த்தைகளை நம்புகிறேன். அவர் தனது வாழ்வில் ஒருபோதும் பொய் சொன்னது இல்லை. அவர் தனது அரசியல் பயணத்திற்கு நடுவே ஆன்மிக பாதையிலும் கவனம் செலுத்தினார். அதுவே அவரது பெருமையாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story