நாமக்கல்: பஸ் மீது நேருக்குநேர் மோதிய பைக் - ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற பஸ்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு சேலம் நோக்கிச் சென்ற பைக்கும், அரசு பஸ்சும் எதிரெதிராக மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் ராசிபுரத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது தனியார் பேருந்து ஒன்று விபத்தை தடுக்க சடன் பிரேக் அடித்த நிலையில், பின்னே வந்த இரண்டு வாகன ஓட்டிகள் பஸ்சின் பின்புரம் மோதி காயமடைந்தனர்.
இந்த நிலையில் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story