த.வா.க.வில் இணைந்த நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி


த.வா.க.வில் இணைந்த நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி
x

நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக இளவஞ்சி செயல்பட்டு வந்தார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் இளவஞ்சி. இவர் கடந்த சில நாட்களுக்குமுன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.,

இந்நிலையில், இளவஞ்சி இன்று தமிழக வாழ்வுரிமை (த.வா.க.) கட்சியில் இணைந்தார். அக்கட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இளவஞ்சி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story