எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜகவினர் பங்கேற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை
சென்னை,
சென்னை அக்கரையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
அக்டோபர் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை நயினார் நாகேந்திரன் மேற்கொள்வார். நாள்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தினசரி இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து, 3-வது இடத்தில் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவார்.
எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். அவர் பேச்சு பாஜகவைக் பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் “அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக” என எடப்பாடி பழனிசாமி கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.






